ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார் பிளஸ்

இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் விலை திடீர் மாற்றம்

Published On 2020-08-25 10:57 GMT   |   Update On 2020-08-25 10:57 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை திடீரென மாற்றி உள்ளது.
 

எம்ஜி மோட்டார்ஸ் நிருவனம் தனது புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹெக்டார் பிளஸ் புதிய விலை ரூ. 13.74 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும்.

எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 46 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா எக்ஸ்யுவி500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News