ஆட்டோமொபைல்
டொயோட்டா அர்பன் குரூயிசர்

ஆறு வேரியண்ட்களில் வெளியாக இருக்கும் டொயட்டா அர்பன் குரூயிசர்

Published On 2020-08-24 12:46 GMT   |   Update On 2020-08-24 12:46 GMT
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் ஆறு வேரியண்ட்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் கார் ஆறு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் வேரியண்ட்கள் பிரீமியம், ஹை மற்றும் மிட் மற்றும் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரிம்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் புதிய கார் ஆறு சிங்கிள் டோன் மற்றும் மூன்று டூயல் டோன் ஷேட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் டாப் எண்ட் பிரீமியம் மாடலில் கிளைமேட் கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

இத்துடன் புதிய காரில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் பிளே சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 



அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News