ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் ஐடி.4

ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி உற்பத்தி துவக்கம்

Published On 2020-08-21 09:00 GMT   |   Update On 2020-08-21 09:00 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தியை துவங்கி உள்ளது. இந்த மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மாட்யூலர் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.

முதற்கட்டமாக இந்த மாடல் ரியர்-வீல் டிரைவ் ஆப்ஸ்ரீனில் அறிமுகம் செய்யப்பட்டு பின் ஆல்-வீல்-டிரைவ் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் பேட்டரி சான்ட்விச் டிசைனில் பொருத்தப்படுகிறது. 



முன்னதாக வெளியான ஸ்பை படங்களின் படி புதிய ஐடி.4 மாடல் தோற்றத்தில் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் 4592எம்எம் நீளமாகவும், 1852எம்எம் அகலம் மற்றும் 1629எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2765எம்எம் அளவில் இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலின் பின்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரியர்-வீல் மோட்டார் 200 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரியர்-வீல் மோட்டாரை தொடர்ந்து விரைவில் முன்புற மோட்டார் கொண்ட ஆல்-வீல் டிரைவ் வெர்ஷனை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News