ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் விலை உயர்வு

Published On 2020-08-12 11:27 GMT   |   Update On 2020-08-12 11:27 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் கார் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸ் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் துவக்க விலை ரூ. 5.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி ரூ. 7.75 லட்சம் என்றும் டாப் எண்ட் டீசல் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் போன்ற மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும், எக்ஸ்இ டீசல் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 6.99 லட்சம் என பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் டாடா அல்ட்ரோஸ் மாடலின் எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அல்ட்ரோஸ் மாடலின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
Tags:    

Similar News