ஆட்டோமொபைல்
ஸ்கோடா கோடியக்

ஸ்கோடா கோடியக் டிஎஸ்ஐ வெளியீட்டில் திடீர் மாற்றம்

Published On 2020-08-05 12:49 GMT   |   Update On 2020-08-05 12:49 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் டிஎஸ்ஐ மாடல் வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் டிஎஸ்ஐ மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் ஜாக் ஹோலிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக ஸ்கோடா கோடியக் டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின் இந்த ஆண்டு இறுதியில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் இதன் வெளியீடு தாமதமாக கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.



புதிய ஸ்கோடா கோடியக் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. 190 பிஎஸ் திறன் கொண்ட இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News