ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

ஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை விவரம்

Published On 2020-08-03 08:45 GMT   |   Update On 2020-08-03 08:45 GMT
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தின் வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஜூலை மாதத்தில் 41300 யூனிட்களை விற்பனை செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இதில் உள்நாட்டில் 38200 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 3100 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. 

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் ஐஎம்டி வேரியண்ட் மற்றும் ஸ்போர்ட் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 



புதிய தலைமுறை கிரெட்டா மாடல் இந்திய சந்தையில் இதுவரை சுமார் 55 ஆயிரத்திற்கும் அதிக முன்பதவுகளை கடந்துள்ளது. இவற்றில் 20 ஆயிரம் யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை விற்பனையாகி இருக்கும் புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடல்களில் 60 சதவீத யூனிட்கள் டீசல் வேரியண்ட் ஆகும்.

ஜூலை மாத விற்பனையில் 98 சதவீதம் உள்நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இத்தகைய வரவேற்புக்கு புத்தம் புதிய கிரெட்டா, வென்யூ, வெர்னா, எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்கள் முக்கிய காரணம் என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார். 
Tags:    

Similar News