ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

ஊரடங்கு விற்பனையில் மாருதி சுசுகி சாதனை

Published On 2020-07-29 07:18 GMT   |   Update On 2020-07-29 07:18 GMT
இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஊரடங்கு கால விற்பனையில் படைத்து இருக்கும் சாதனை பற்றிய விவரங்களை பார்ப்போம்.


இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மாருதி சுசுகி ஊரடங்கு துவங்கியது முதல் விற்பனை செய்த இரண்டில் ஒரு கார் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து உள்ளது.

ஊரடங்கு மாதங்களில் 45 சதவீத சந்தேகங்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2019 நிதியாண்டில் 13 சதவீதம் ஆகும். மாருதி சுசுகியின் 26 டச் பாயிண்ட்களில் 21 ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.



தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்கும் வகையில் மாருதி சுசுகி நிறுவனம் பிரத்யேக ஆன்லைன் சேவையை கட்டமைத்து இருக்கிறது. டிஜிட்டல் சிக்னல்கள் அடிப்படையில், மாருதி சுசுகி நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட தகவல்களை வழங்கி வருகிறது. 

டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் மூலம் ஆண்டு முழுக்க வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க முடியும் என  மாருதி சுசுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் மொபைல் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News