ஆட்டோமொபைல்
கியா சொனெட்

கியா சொனெட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-07-27 10:20 GMT   |   Update On 2020-07-27 10:20 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சொனெட் முன்பதிவு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி விலை மற்றும் வெளியீடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. 

புதிய சொனெட் மாடலின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.



காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது. 

கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News