ஆட்டோமொபைல்
ஹூண்டாய்

எஸ்யுவி விற்பனையில் அசத்தும் ஹூண்டாய் கார்

Published On 2020-07-25 09:04 GMT   |   Update On 2020-07-25 09:04 GMT
இந்திய சந்தையின் எஸ்யுவி பிரிவு வாகனங்கள் விற்பனையில் ஹூண்டாய் கார் முன்னணி இடம் பிடித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் இந்திய சந்தையின் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக இருக்கிறது. மே மற்றும் ஜூன் மாதம் என தொடர்ச்சியாக இரு மாதங்களாக அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடல்களில் 2020 கிரெட்டா முதலிடத்தில் இருக்கிறது. 

2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 10419 ஹூண்டாய் கிரெட்டா யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது சந்தையில் விற்பனையான வாகனங்களில் 38 சதவீதம் ஆகும். கிரெட்டாவை தொடர்ந்து கியா செல்டோஸ் மாடல் 8725 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது அதிகம் விற்பனையான மாடலாக இருக்கிறது.



இதே நிதியாண்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ 12 சதவீத பங்குகளை பெற்று உள்ளது. மஹிந்திரா நிறுவனம் 3287 ஸ்கார்பியோ யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் எம்ஜி ஹெக்டார் 2539 யூனிட்களும், டாடா ஹேரியர் 814 யூனிட்களும் விற்பனையாகி இருக்கிறது. 

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து நிறுவனங்களின் வாகன விற்பனையும் பெருமளவு சரிந்துள்ளது. அந்த வகையில் இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடுவது பொருத்தமான ஒன்றாக இருக்காது. எனினும், கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் இடையேயான போட்டி, விற்பனையை அதிகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News