ஆட்டோமொபைல்
டொயோட்டா யாரிஸ்

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிபிட் டீசர் வெளியீடு

Published On 2020-07-24 10:13 GMT   |   Update On 2020-07-24 10:13 GMT
டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிப்ட் காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
 

டொயோட்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் யாரிஸ் மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. புதிய ஃபேஸ்லிப்ட் மாடல் பிலிப்பைன்சில் ஜூலை 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய கார் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. 

டீசரின் படி ஃபேஸ்லிப்ட் யாரிஸ் காரில் மேம்பட்ட பம்ப்பர், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட கிரில் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேம்பட்ட முன்புற பம்ப்பரில் டிரேப்சோயிடல் சென்ட்ரல் ஏர் டேம், ஹெட்லேம்ப் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளது. இது காருக்கு லெக்சஸ் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.



ஃபாக் லேம்ப்கள் சி வடிவ ரெசஸ்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

புதிய மாடலில் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகமான யாரிஸ் மாடல் விற்பனையில் அதிக வரவேற்பு பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இதன் வர்த்தக மாடல் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News