ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எஸ் கிராஸ்

மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் அறிமுக விவரம்

Published On 2020-07-18 09:24 GMT   |   Update On 2020-07-18 09:24 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை பிஎஸ்6 அப்டேட் பெறாத மாடலாக எஸ் கிராஸ் இருக்கிறது. இதுவரை டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதன் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.



விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்று எஸ் கிராஸ் மாடலிலும் சுசுகியின் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. முதன்முதலில் இந்த என்ஜின் சியாஸ் மாடலில் வழங்கப்பட்டது. இது 105 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8.5 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News