ஆட்டோமொபைல்
2020 ஹூண்டாய் கிரெட்டா

புதிய மைல்கல் கடந்த 2020 ஹூண்டாய் கிரெட்டா

Published On 2020-07-17 11:07 GMT   |   Update On 2020-07-17 11:07 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.


ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 45 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய மைல்கல் பற்றிய அறிவிப்பை ஹூண்டாய் நிறுவனம் தனது டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுக நிகழ்வில் அறிவித்தது. 2020 கிரெட்டா எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல் எட்டி இருக்கிறது. 

இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. கடந்த மாதம் வரை 40 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், 14 நாட்களுக்குள் இந்த கார் மேலும் 5 ஆயிரம் புதிய முன்பதிவுகளை பெற்று உள்ளது. 



புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News