ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஹோண்டா சிட்டி அறிமுகம்

Published On 2020-07-16 06:06 GMT   |   Update On 2020-07-16 06:06 GMT
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஹோண்டா சிட்டி மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
 

இந்திய சந்தையில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடல் விலை ரூ. 10.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி ஐந்து வித நிறங்களில், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.



2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 119 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 98 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய 2020 ஹோண்டா சிட்டி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.64 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி கார் ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், டொயோட்டா யாரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News