ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ்

ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-07-15 12:20 GMT   |   Update On 2020-07-15 12:20 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் விலை ரூ. 7.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் கேன்டி வைட், கார்பன் ஸ்டீல், பிரிலியண்ட் சில்வர் மற்றும்  டாஃபி பிரவுன் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கோடா ரேபிட் பிளஸ் வேரியண்ட்டில் பிளாக்டு-அவுட் கிரில் மற்றும் பி-பில்லர்கள், லிப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.



இத்துடன் காரின் உள்புறம் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஸ்மார்ட்லின்க் கனெக்டிவிட்டி, டூயல் எபோனி-சேண்ட் இன்டீரியர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.

புதிய ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 18.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News