ஆட்டோமொபைல்
2021 ரேன்ஜ் ரோவர்

இந்தியாவுக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் அறிமுகம்

Published On 2020-07-15 06:18 GMT   |   Update On 2020-07-15 06:18 GMT
இந்திய சந்தைக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

இந்திய சந்தைக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2021 கார் முந்தைய மாடலை விட சில புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மைல்டு ஹைப்ரிட் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் இருக்கிறது.



இது 3.0 லிட்டர் இன்லைன்-6 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 345 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெட்ரோல் பி400 இன்ஜெனியம் இன்லைன்-6 யூனிட் வழங்கப்படுகிறது. இது 395 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இரண்டு என்ஜின்களுடன் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் புதிய 2 ஆஃப்-ரோடு ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் பிஎஸ்6 மற்றும் யூரோ 6 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

காரின் வெளிப்புற தோற்றம் தற்போதைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் பெரிய கிரில், ஃபுல் எல்இடி ஹெட்லைட்கள், டெயில் லேம்ப்கள், வழங்கப்படுகின்றன. இத்துடன் பவர் சீட், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், டச் ப்ரோ டூயல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி மற்றும் காரினுள் வைபை வசதி மூலம் நான்கு சாதனங்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News