ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார் பிளஸ்

அதிக இடவசதி கொண்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-07-14 08:38 GMT   |   Update On 2020-07-14 08:38 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெக்டார் பிளஸ் ரூ. 13.49 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இதன் டாப் எண்ட் ஹெக்டார் பிளஸ் ஷார்ப் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ரூ. 18.54 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள விலை அறிமுக சலுகையின் பேரில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகரிக்கப்படுகிறது.



புதிய ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணக்கக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. விரைவில் இதே மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா எக்ஸ்யுவி500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News