ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட் ரைடர்

அதிக வரவேற்பு காரணமாக ஸ்கோடா கார் முன்பதிவு நிறுத்தம்

Published On 2020-07-11 09:57 GMT   |   Update On 2020-07-11 09:57 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி உள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடல் விலை ரூ. 7.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் ரைட் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதால் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 



ஸ்கோடா ரேபிட் ரைடர் பிஎஸ்6 வெர்ஷன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலில் 2 டின் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ல்டீரிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News