ஆட்டோமொபைல்
ஃபோர்ஸ் குர்கா

புத்தம் புதிய ஃபோர்ஸ் குர்கா வெளியீட்டு விவரம்

Published On 2020-07-10 11:18 GMT   |   Update On 2020-07-10 11:18 GMT
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை குர்கா எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்த புதிய குர்கா மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி உள்ளது.  தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், புதிய மாடல் 2020 தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

ஃபோர்ஸ் ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
Tags:    

Similar News