ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார் பிளஸ்

எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-07-08 06:12 GMT   |   Update On 2020-07-08 06:12 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடல் இந்தியாவில் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.



இதன் டர்போ பெட்ரோல் வெர்ஷன் டிசிடி யூனிட் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் வெர்ஷன்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.  

முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News