ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி

விற்பனையகம் வந்த 2020 ஹோண்டா சிட்டி

Published On 2020-07-01 08:39 GMT   |   Update On 2020-07-01 08:39 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 சிட்டி மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது.


ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடலின் விலை தவிர பெரும்பாலான விவரங்கள் வெளியாகிவிட்டன.  இந்நிலையில், புதிய ஹோண்டா சிட்டி மாடல் விற்பனையகம் வந்தடைந்துள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா சிட்டி பெட்ரோல் வேரியண்ட் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. 

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News