ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

முன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்

Published On 2020-06-27 05:27 GMT   |   Update On 2020-06-27 05:27 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
 

2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை வாங்க 26 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

நாடுதழுவிய ஊரடங்கு இன்னும் முழுமையாக திரும்பப் பெறப்படாத நிலையில், புதிய மாருதி கார் முன்பதிவில் இத்தனை மைல்கல் கடந்து இருக்கிறது. தற்போதைய முன்பதிவு எண்ணிக்கையை தொடர்ந்து புதிய மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என மாருதி சுசுகி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா விலை இந்தியாவில் ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் மாருதியின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News