ஆட்டோமொபைல்
ஹூண்டாய் வென்யூ

ஒரு வருடத்தில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த ஹூண்டாய் கார்

Published On 2020-06-26 08:52 GMT   |   Update On 2020-06-26 08:52 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலான வென்யூ இந்திய சந்தையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. இதில் 97400 யூனிட்கள் இந்தியாவிலும், 7400 யூனிட்கள் சர்வதேச சந்தையில் விற்பனையாகி இருக்கிறது. 

புதிய வென்யூ மாடல் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் எஸ்யுவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் வென்யூ மாடல் ஹூண்டாயின் பாரம்பரிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்புறம் டார்க் க்ரோம் முன்புற கிரில், பக்கவாட்டில் சாலிட் மற்றும் ஃபுல் வால்யூம் வீல் ஆர்ச் மற்றும் உறுதியான கேரக்டர் லைன் கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் வென்யூ பின்புறம் பம்பர், ரிவர்ஸ் விளக்கு, பாக் விளக்கு ஆகியன வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் உள்பகுதியில் 8 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.

பாதுகாப்பு அம்சத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியன இதில் முக்கியமான மாற்றங்களாகும். ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவையும் உள்ளன. 

இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ விலை ரூ.13.82 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரை இருக்கும். இதில் டீசல் மாடல் விலை ரூ.15.13 லட்சத்தில் தொடங்கி ரூ.20.05 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News