ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எர்டிகா

இந்தியாவில் அதிகம் விற்பனையான மாருதி எம்பிவி

Published On 2020-06-05 16:31 IST   |   Update On 2020-06-05 16:31:00 IST
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எம்பிவி மாடல் கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா முதலிடம் பிடித்துள்ளது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய சந்தையில் மே மாதத்தில் அதிகம் விற்பனையான மாடலாக இருக்கிறது. மே மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் 2353 எர்டிகா யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் மாருதி நிறுவனம் 8864 எர்டிகா யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு மே மாத விற்பனையில் 73 சதவீதம் சரிவை மாருதி சுசுகி நிறுவனம் சந்தித்து இருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்த எம்பிவி விற்பனை 71 சதவீதம் சரிவடைந்துள்ளது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காருடன் ஒப்பிடும் போது, 2020 மே மாதத்தில் மஹிந்திரா பொலிரோ 1715 யூனிட்களும், ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் 931 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன.

தற்சமயம் மாருதி எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News