ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

கார் விற்பனையில் மாருதி சுசுகியை பின்தள்ளிய ஹூண்டாய் கிரெட்டா

Published On 2020-06-03 11:33 GMT   |   Update On 2020-06-03 11:33 GMT
இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா முதல் முறையாக மாருதி சுசுகியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.



ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறையாக மாருதி சுசுகியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.  இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 3212 யூனிட்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆட்டோமொபைல் துறை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.



மே மாத மத்தியில் தான் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஹூண்டாய் புதிய கிரெட்டா எஸ்யுவி மாடலினை மார்ச் மாத துவக்கத்தில் வெளியிட்டது. எனினும், ஊரடங்கு காரணமாக இந்த கார் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது. மே மாத இறுதியில் மீண்டும் பணிகளை துவங்கிய ஹூண்டாய் முந்தைய முன்பதிவுகளை விற்பனையாக மாற்றியது.

ஹூண்டாய் கிரெட்டாவை தொடர்ந்து மாருதி எர்டிகா 2353 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி டிசையர் 2215 யூனிட்களும், மஹிந்திரா பொலிரோ 1715 யூனிட்களும், மாருதி இகோ 1617 யூனிட்கள் விற்பனையாகி டாப் 5 இடங்களை பிடித்துள்ளன.
Tags:    

Similar News