ஆட்டோமொபைல்
ரெனால்ட் டஸ்டர்

விரைவில் இந்தியா வரும் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்

Published On 2020-05-26 09:56 GMT   |   Update On 2020-05-26 09:56 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய 1.3 லிட்டர் ஹெச்ஆர்13 என்ஜின் ஏற்கனவே 2020 நிசான் கிக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே என்ஜின் கொண்ட டஸ்டர் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.



முன்னதாக டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலின் வெளிப்புறம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காரின் முன்புற கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், டெயில்கேட் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற இன்சர்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. புதிய டஸ்டரில் வழங்கப்பட இருக்கும் ஹெச்ஆர்13 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் 156 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் டைம்லர் மற்றும் ரெனால்ட் நிசான் மிட்சுபிஷி இணைந்து உருவாக்கி இருக்கின்றன.
Tags:    

Similar News