ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

ஊரடங்கு காலகட்டத்திலும் முன்பதிவில் அசத்தும் விட்டாரா பிரெஸ்ஸா

Published On 2020-05-18 09:46 GMT   |   Update On 2020-05-18 09:46 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா முன்பதிவுகள் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் இந்த காரை வாங்க இத்தனை பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

விட்டாரா பிரெஸ்ஸா மாடல் மிக குறைந்த காலகட்டத்தில் இத்தகைய மைல்கல்லை எட்டியிருக்கிறது. மேலும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என மாருதி சுசுகி இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



முன்னதாக விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் டிசைன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோ டிம் ஆகும் ஐஆர்விஎம்கள், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News