ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியோஸ்

இந்தியாவில் ஐ10 கிராண்ட் நியோஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்த ஹூண்டாய்

Published On 2020-05-07 10:11 GMT   |   Update On 2020-05-07 10:11 GMT
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ10 கிராண்ட் நியோஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது.
 


ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ10 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.75 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பிஎஸ்6 டீசல் என்ஜின் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் மூன்று வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஆஸ்டா வேரியண்ட் விலை ரூ. 8.04 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் வேரியண்ட் விலை ரூ.7.90 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 74 பிஹெச்பி பவர், 190 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மேம்பட்ட என்ஜின் தவிர காரின் வடிவமைப்பு முழுக்க பிஎஸ்4 மாடலில் உள்ளது போன்றே வழங்கப்பட்டுள்ளது. இதில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News