ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

விரைவில் இந்தியா வரும் என்ட்ரி லெவல் ஹூண்டாய் எஸ்யுவி

Published On 2020-05-06 09:51 GMT   |   Update On 2020-05-06 09:51 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஹூண்டாய் சாண்ட்ரோ கார் இந்திய சந்தையில் பேஸ் மாடலாக இருக்கிறது. புதிய கார் சான்ட்ரோ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்வதற்கான ஆய்வினை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார். 

புதிய என்ட்ரி லெவல் மாடல் மைக்ரோ எஸ்யுவியாக இருக்கும் என்றும் இது மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.



ஹூண்டாயின் புதிய என்ட்ரி லெவல் மாடல் இந்திய வாடிக்கையாளர்களில் முதல் முறை கார் வாங்குவோரை கவரும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் ஹேட்ச்பேக் பிரிவு அதிக விற்பனையை பெற்று வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, நியோஸ் மற்றும் ஐ10 கிராண்ட் உள்ளிட்டவை அதிக விற்பனையாகி இருக்கிறது.

இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் இயான் ஹேட்ச்பேக் மாடலை விற்பனை செய்து வந்தது. எனினும், இந்த மாடலின் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.
Tags:    

Similar News