ஆட்டோமொபைல்
வால்வோ கார்

கார் விற்பனைக்கு புதிய திட்டம் துவங்கிய வால்வோ இந்தியா

Published On 2020-05-05 09:57 GMT   |   Update On 2020-05-05 09:57 GMT
இந்திய சந்தையில் வாகனங்களை விற்பனை செய்வது மற்றும் சர்வீஸ் முன்பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வால்வோ நிறுவனம் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது.



ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது வானங்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும், சர்வீஸ் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. 

புதிய திட்டத்தை வால்வோ நிறுவனம் வால்வோ காண்டாக்ட்லெஸ் புரோகிராம் என அழைக்கிறது. புதிய திட்டத்தில் வால்வோ வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்க விரும்புவோர் பயன்பெற முடியும். இதில் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.



இத்துடன் புதிய வால்வோ கார் வாங்குவோரும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான டெஸ்ட் டிரைவ் வழங்கப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் நிதி சேவைகள் டிஜிட்டல் முறையிலும், ஆன்லைனில் ஆவனங்களை சரிபார்ப்பது என வாகனத்தை முழுமையாக ஆன்லைன் மூலமாகவே வாங்க முடியும்.

தற்போதைய கொரோனா பாதிப்பையொட்டி வால்வோ நிறுவன விற்பனையகங்கள் முழுக்க பாதுகாப்பானதாக மாற்ற கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. இத்துடன் கார்களை சுத்தம் செய்ய வால்வோ நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News