ஆட்டோமொபைல்
எஃப்சிஏ வலைதளம்

இந்தியாவில் ஆன்லைன் விற்பனையை துவங்கிய எஃப்சிஏ

Published On 2020-05-04 10:10 GMT   |   Update On 2020-05-04 10:10 GMT
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனம் ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளத்தை துவங்கியுள்ளது.



ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் (எஃப்சிஏ) நிறுவனம் தனது ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய தளத்தை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் புக் மை ஜீப் எனும் தளத்திற்கு சென்று வாங்க விரும்பும் எஸ்யுவி மாடலை மூன்றே வழிமுறைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

தற்சமயம் நாடுமுழுக்க கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய ஆன்லைன் தளத்தை எஃப்சிஏ நிறுவனம் துவங்கி உள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நேரடியாக விற்பனையகம் செல்லாமல் புதிய வாகனத்தை தேர்வு செய்ய முடியும்.



ஜீப் இந்தியா வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ள புக் மை ஜீப் தளம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜீப் மாடலின் சரியான வேரியண்ட், பவர்டிரெயின் ஆப்ஷன், நிறம் மற்றும் இதர விவரங்களை தேர்வு செய்யலாம். வாகனம் கான்ஃபிகர் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

ஆன்லைன் முன்பதிவு நிறைவுற்றதும் புக் மை ஜீப் தளம் வாடிக்கையாளருக்கென பிரத்யேக ஐடியை உருவாக்கி, அதனை வாடிக்கையாளர் வசிக்கும் விற்பனையாளருடன் இணைத்து விடும். பின் விற்பனை மைய அதிகாரி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு டெஸ்ட் டிரைவ் ஏற்பாடு செய்யப்படும்.
Tags:    

Similar News