ஆட்டோமொபைல்
சர்வதேச சந்தையில் லெக்சஸ் ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் அறிமுகம்
லெக்சஸ் நிறுவனத்தின் ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
லெக்சஸ் நிறுவனம் பிஎஸ் பிளாக் லைன் காரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மொத்தம் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்படும் என லெக்சஸ் அறிவித்து இருக்கிறது. லெக்சஸ் ஜிஎஸ் லைன் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும் முன் வெளியாகும் கிடைசி எடிஷன் காராக இது இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஜிஎஸ் பிளாக் லைன் எடிஷன் லெக்சஸ் ஜிஎஸ்350எஃப் ஸ்போர்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ் லைன் பிளாக் எடிஷன் ரியர்-வீல் டிரைவ் கொண்டிருப்பதோடு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. விங் மிரர் கேப்கள், கிரில் இன்சர்ட்கள் மற்றும் ஸ்பாயிலர் உள்ளிட்டவை கிளாஸ் வைட் நிறத்திலும் சக்கரங்கள் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கின்றன.
காரின் உள்புறம் பிளாக் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ட்ரிம்களும், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஆம்ரெஸ்ட் உள்ளிட்டவை அல்கான்ட்ரா லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் காரின் உள்புறங்களில் அதிகளவு கஸ்டமைசேஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புதிய லெக்சஸ் ஜிஎஸ் பிளாக் எடிஷன் மாடலில் 3.5 லிட்டர் வி6 மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை இந்த ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.