ஆட்டோமொபைல்
டாடா வாகனம்

சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 35 சதவீதம் சரிவு

Published On 2020-04-21 10:51 GMT   |   Update On 2020-04-21 10:51 GMT
டாடா மோடடார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சர்வதேச அளவில் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 2020 நிதியாண்டின் கடைசி காலாண்டு வாக்கில் சர்வதேச அளவில் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இந்த  காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,31,929 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. 

இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் விற்பனை 49 சதவீதம் சரிவடைந்து, மொத்தம்  72,608 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் சரிவடைந்து 1,59,321 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.



உலகாளவிய விற்பனையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையும் அடங்கும். இந்நிறுவனம் மொத்தம் 1,26,979 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இத்துடன் செரி ஜாகுவார் லேண்ட் ரோவர் சீனாவில் 6288 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. 

ஜாகுவார் ஒட்டுமொத்த வாரனங்கள் விற்பனை 32,940 யூனிட்களாகவும், லேண்ட் ரோவர் சர்வதேச சந்தையில் 94,039 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

மார்ச் 2019 மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 11,012 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. இது 84 சதவீதம் வரை சரிவாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதே விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News