ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் குழும வாகனங்கள் விற்பனை 37 சதவீதம் சரிவு

Published On 2020-04-20 08:52 GMT   |   Update On 2020-04-20 08:52 GMT
ஃபோக்ஸ்வேகன் குழும நிறுவனத்தில் வாகனங்கள் விற்பனை ஒரே மாதத்தில் சுமார் 37 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.



ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தங்களது நிறுவன கார்களின் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்து இருக்கிறது. இதில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கார்கள் விற்பனை 37.6 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை மையங்கள் மூடப்பட்டு இருப்பதால் வாகனங்கள் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. 



மேற்கு ஐரோப்பாவில் மார்ச் மாதத்தில் வாகனங்கள் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.6 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. இதே போன்று மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பகுதிகளிலும் வாகனங்கள் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. 

பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதால் விற்பனை நிலவரம் ஏப்ரல் மாதத்தில் மேலும் மோசமடையலாம் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 81 சதவீதம் வரை சரிவடைந்து இருப்பதால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது எதிர்கால கணிப்புக்களை திரும்ப பெற்றிருக்கிறது. 
Tags:    

Similar News