ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இவி

விற்பனையில் அசத்தும் டாடா நெக்சான் இவி

Published On 2020-04-18 10:45 GMT   |   Update On 2020-04-18 10:45 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது.



பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இதுவரை டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பெரும்பான்மை நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க துவங்கி இருக்கின்றனர். 



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் இவி மாடலை அறிமுகம் செய்தது. விற்பனையை பொருத்தவரை டாடா நிறுவனம் இதுவரை 198 நெக்சான் இவி மாடல்களையும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 116 இசட் எஸ் இவி யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஹூண்டாய் கோனா இவி விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

நெக்சான இவி மாடலின் துவக்க விலை ரூ. 13.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News