ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மாருதி சசுகி ஸ்விஃப்ட்

Published On 2020-04-17 10:22 GMT   |   Update On 2020-04-17 10:22 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார்களில் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல்களில் சத்தமில்லாமல் புதிய 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கி இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பில்ட் இன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இதில் ப்ளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ்-இன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தவிர காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.



மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலில் விரைவில் 1.2 என்ஜினுக்கு மாற்றாக பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 பிஎஸ் பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

தற்போதைய பெட்ரோல் என்ஜினை போன்றே புதிய என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் 2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் புதிய மாடலில் மேம்பட்ட பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News