ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார் பிளஸ்

எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-04-16 10:31 GMT   |   Update On 2020-04-16 10:31 GMT
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

 

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவை ஏப்ரல் 14 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின் பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து இருக்கிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாகனங்களை சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தன. கடும் சூழ்நிலையிலும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.



முன்னதாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்து இருந்தது.

எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News