ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டார்

இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் அறிமுகம்

Published On 2020-04-10 10:12 GMT   |   Update On 2020-04-10 10:12 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டார் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் அதிக வரவேற்பு பெற்ற ஹெக்டார் எஸ்யுவி விற்பனையிலும் அசத்தியது. எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் எஸ்யுவி பெட்ரோல் மாடலை பிஎஸ்6 தரத்துக்கு ஏற்கனவே அப்டேட் செய்துவிட்டது.

இந்நிலையில் எம்ஜி ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட என்ஜின் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எம்ஜி ஹெக்டார் பிஎஶ் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13.88 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுளஅளது.



பிஎஸ்6 வேரியண்ட்டிலும் 2.0 லிட்டர் ஃபியாட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168.4 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

காரின் வெளிப்புறம் டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் டூயல்டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், டைனமிக் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

உள்புறத்தில் 10.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கிளைமேட் கண்ட்ரோல்கள், எம்ஜி நிறுவனத்தின் ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இ-சிம் எம்பெட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு எப்போதும் இணைய வசதியை வழங்குகிறது.
Tags:    

Similar News