ஆட்டோமொபைல்
டொயோட்டா ஃபார்ச்சூனர்

விரைவில் அறிமுகமாகும் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர்

Published On 2020-04-08 10:52 GMT   |   Update On 2020-04-08 10:52 GMT
டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடல் காரை 2009 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த எஸ்யுவி அதிக விற்பனையாக துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு எஸ்யுவி மாடல்கள் இந்திய சந்தையில் களமிங்கி வருகின்றன. 

இதனால் ஃபார்ச்சூனர் மாடல் சற்றே பழையதாகி இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா நிறுவன மூத்த துணை தலைவர் நவீன் சோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 



புதிய லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

புதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடல் பிஎஸ்6 வேரியண்ட்டை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

தற்சமயம் இந்த மாடலின் விலை ரூ. 28.18 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News