ஆட்டோமொபைல்
ஹோண்டா இ

புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டணி

Published On 2020-04-04 09:11 GMT   |   Update On 2020-04-04 09:11 GMT
ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.



ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. ஹோண்டா பிராண்டிங்கில் வெளியாக இருக்கும் வாகனங்கள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச இவி பிளாட்ஃபார்மில் உருவாக இருக்கிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் இவி பிளாட்ஃபார்ம் வாகனங்களில் அல்டியம் ரக பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய வாகனத்தின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்கள் ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்குகிறது. புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்கள் இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்படுகிறது. 



இவற்றுக்கான பணிகள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வட அமெரிக்க ஆலையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விற்பனை 2024 ஆம் ஆணடு துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக இவை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இருநிறுவனங்கள் சார்பில் உருவாகும் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு வாக்கில் ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து பேட்டரி மாட்யூல் உருவாக்கும் பணிகளை துவங்கின.  

எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஜெனர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆன்ஸ்டார் பாதுகாப்பு சேவைகளை ஒருங்கிணைக்கிறது. இதுதவிர ஜெனர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News