ஆட்டோமொபைல்
ரெனால்ட் நிசான்

டாடா நெக்சானுக்கு போட்டியாகும் ரெனால்ட் வாகனங்கள்

Published On 2020-03-30 10:48 GMT   |   Update On 2020-03-30 10:48 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் நிசான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் டாடா நெக்சான் காருக்கு போட்டியாக புதிய அம்சம் பொருத்தப்படுகிறது.



ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் சன்ரூஃப் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெனால்ட் ஹெச்.பி.சி. மற்றும் நிசாசன் இ.எம்.2 காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் கிகெர் மற்றும் மேக்னைட் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரு நிறுவன மாடல்களில் சன்ரூஃப் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இறுக்கிறது. சன்ரூஃப் அம்சம் காரில் அதிக இடவசதி இருப்பது போன்ற உணர்வையும், காரினுள் அதிக காற்றோட்டம் புக வழி செய்யும்.



இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் கார்களில் சன்ரூஃப் அம்சம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. கிகெர் மற்றும் மேக்னைட் மாடல்கள் சி.எம்.எஃப்.-ஏ பிளஸ் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடலும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

புதிய கார்களில் இருநிறுவனங்களும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், போல்டு ஷோல்டர் லைன்கள் உள்ளிட்டவை இடம்பெறலாம். இவை காருக்கு பிரம்மாண்ட தோற்றத்தை வழங்கும்.

இரு மாடல்களிலும் 1.0 லிட்டர், மூன்று சிலண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் ஹெச்.ஆர்.10 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 95 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எகிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News