ஆட்டோமொபைல்
வால்வோ

வாகனங்களில் கோளாறு காரணமாக 7.5 லட்சம் கார்களை திரும்ப பெறும் வால்வோ

Published On 2020-03-23 10:33 GMT   |   Update On 2020-03-23 10:33 GMT
வால்வோ நிறுவன கார் மாடல்களில் கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து 7.5 லட்சம் கார்களை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.



வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில கார் மாடல்களை இந்திய சந்தையில் திரும்ப பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வெவ்வேறு வால்வோ மாடல்களை சேர்ந்த சுமார் 1891 யூனிட்களை திரும்ப பெறுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது.

வால்வோ கார்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக வால்வோ கார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை (AEB) இயக்கும் மென்பொருளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது. இந்த கோளாறு சில வெப்பநிலைகளில் ஏற்படுவது கண்டறியப்பட்டு இருக்கிறது.



இதே பிரச்சினை வால்வோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்த சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது. வால்வோ எக்ஸ்.சி.40, எக்ஸ்.சி.60, எக்ஸ்.சி.90, வி90 கிராஸ் கண்ட்ரி மற்றும் எஸ்90 உள்ளிட்ட மாடல்களை பாதித்து இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களை பயன்படுத்துவோரில், கோளாறு உறுதி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்போரை வால்வோ தொடர்பு கொண்டு, பிரச்சினை இலவசமாக சரி செய்து தரப்படும் என வால்வோ தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை மென்பொருள் அப்டேட் மூலமாகவே சரி செய்துவிட முடியும்  என கூறப்படுகிறது.
Tags:    

Similar News