ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் டி ராக்

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் அறிமுகம்

Published On 2020-03-18 09:21 GMT   |   Update On 2020-03-18 09:21 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டி ராக் எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி ராக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்தது. இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்.யு.வி. விலை ரூ. 19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி இருக்கின்றன. இதுவரை புதிய காரை வாங்க சுமார் 300 பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இந்த காரின் விநியோகம் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது. 

ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. கார்னெரிங் லைட்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டி ராக் காரில் 17 இன்ச் அலாய் வீல்கள், மெல்லிய மற்றும் அழகிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.



காரின் உள்புறம் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட், லெதர் இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், டூயல் டோன் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், பல்வேறு ஏர்பேக், ஏ.பி.எஸ். இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News