ஆட்டோமொபைல்
ஸ்கோடா கரோக்

இந்தியாவில் புதிய ஸ்கோடா காருக்கான முன்பதிவு துவங்கியது

Published On 2020-03-17 10:11 GMT   |   Update On 2020-03-17 10:11 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கரோக் மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.



ஸ்கோடா இந்தியா நிறுவனம் கரோக் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய ஸ்கோடா கரோக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கரோக் எஸ்.யு.வி. மாடலின் விநியோகம் மே 6-ம் தேதி துவங்குகிறது. இந்த காரில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.



ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 150 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

இந்திய சந்தையில் ஸ்கோடா கரோக் மாடலின் துவக்க விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News