ஆட்டோமொபைல்
2020 ஹூண்டாய் கிரெட்டா

இந்தியாவில் 2020 ஹூண்டாய் கிரெட்டா அறிமுகம்

Published On 2020-03-16 10:58 GMT   |   Update On 2020-03-16 10:58 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய 2020 கிரெட்டா மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் ix25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.



புதிய ஹூண்டாய் கிரெட்டா 7 இன்ச் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் புளூ லின்க் ஸ்மார்ட்வாட்ச் ஆப், பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டெட் சீட்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News