ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

ஏழு நாட்களில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய் கார்

Published On 2020-03-12 10:47 GMT   |   Update On 2020-03-12 10:47 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா கார் முன்பதிவு துவங்கிய ஏழு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.



ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது 2020 கிரெட்டா எஸ்.யு.வி. மாடலை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2020 கிரெட்டா மாடலுக்கான முன்பதிவுகளை மார்ச் 2-ம் தேதி துவங்கியது. இதன் வெளியீடு மார்ச் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது.

2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களை 2020 கிரெட்டா எஸ்.யு.வி. கொண்டிருக்கிறது.



முன்னதாக வெளியான தகவல்களில் புதிய 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள் மற்றும் பத்து வித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவைதவிர புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இதே என்ஜின்கள் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் 115 பி.எஸ். பவர், 1.4 லிட்டர் டி -ஜி.டி.ஐ. மோட்டார் 140 பி.எஸ். செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News