ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் டி ராக்

முன்பதிவில் 300 யூனிட்கள் - அசத்தல் வரவேற்பு பெறும் ஃபோக்ஸ்வேகன் கார்

Published On 2020-03-09 09:04 GMT   |   Update On 2020-03-09 09:04 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் எஸ்.யு.வி. கார் மாடல் முன்பதிவில் 300 யூனிட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டி ராக் எஸ்.யு.வி. மாடலினை மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதுவரை சுமார் 300 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிகுவான் ஆல்ஸ்பேஸ், டி ராக் மற்றும் டைகுன் என மூன்று மாடல் கார்களை வெளியிட ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வரிசையில் நான்காவதாக புதிய எஸ்.யு.வி. ஒன்று இணைந்து இருக்கிறது. எனினும் புதிய எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.



புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 205 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொணடிருக்கிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.4 நொடிகளில் எட்டிவிடும்.
Tags:    

Similar News