ஆட்டோமொபைல்
2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1

இந்தியாவில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 அறிமுகம்

Published On 2020-03-06 09:14 GMT   |   Update On 2020-03-06 09:15 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 எக்ஸ்1 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. இந்தியாவில் 2020 எக்ஸ்1 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடல்: ஸ்போர்ட் எக்ஸ், எக்ஸ்லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 1 ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 42.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் எக்ஸ் லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் ஸ்போர்ட் எக்ஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் டாப் எண்ட் ஸ்போர்ட் எக்ஸ் மாடல் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.



அதன்படி பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடலில் பி.எஸ். 6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. மேம்பட்ட 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 192 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம்., 280 என்.எம். டார்க் @ 1350 - 4600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

இதன் டீசல் யூனிட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 400 என்.எம். டார்க் @ 1700-2500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது. டீசல் என்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடல்: ஆல்பைன் வைட், பிளாக், பிளாக் சஃபையர், கிளேசியர் வைட், மினரல் வைட், மினரல் கிரே, ஸ்பார்க்ளிங் பிரவுன், ஸ்பார்க்ளிங் ஸ்டாம், மெடிட்டரேனியன் புளூ, சன்செட் ஆரஞ்சு, ஜூகாரோ பெய்க் மற்றும் ஸ்டாம் பே மெட்டாலிக் என 12 நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News