ஆட்டோமொபைல்
விட்டாரா பிரெஸ்ஸா பி.எஸ்.6

20 நாட்களில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்த மாருதி கார்

Published On 2020-03-05 09:16 GMT   |   Update On 2020-03-05 09:16 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரை வாங்க 20 நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 விட்டாரா பிரெஸ்ஸா காரினை வாங்க 20 நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் இந்த எஸ்.யு.வி. மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய விட்டாரா பிரெஸ்ஸா பார்க்க பி.எஸ்.4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் எல்.இ.டி. லைட்டிங், புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.



புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் K சீரிஸ் யூனிட் ஆகும். இதே என்ஜின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் டாப் எண்ட் மாடல்களில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய பெட்ரோல் என்ஜின் தவிர மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் ஸ்டீரிங் வீல் லெதர் ஸ்டிராப் செய்யப்பட்டு, ஆட்டோ டிம்மிங் IRVMகள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவி்ட்டி கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News