ஆட்டோமொபைல்
2020 பி.எம்.டபுள்யூ. 530ஐ ஸ்போர்ட்

2020 பி.எம்.டபுள்யூ. 530ஐ ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-15 10:00 GMT   |   Update On 2020-02-15 08:54 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 530ஐ ஸ்போர்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம் புதிய 530ஐ ஸ்போர்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. 530ஐ சென்னையில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் குறைந்த விலை 5 சீரிஸ் மாடலாக இருக்கிறது.

பி.எம்.டபுள்யூ. 530ஐ முன்புறம் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2020 காரில் புதிய மேம்பட்ட பம்ப்பர், 17 இன்ச் அளவில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், வெளிப்புறம் பிளாக் ட்ரிம், க்ரோம் டிப் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

காரின் உள்புறம் பெரிய 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்னிங், பிரீமியம் லெதர் இருக்கைகள் மற்றும் 12 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.



புதிய காரில் பி.எஸ்.6 ரக 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 250 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.1 நொடிகளில் எட்டக்கூடியதாகும்.

இத்துடன் லான்ச் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்ஸ் ரியர் வீல் டிரைவ் மற்றும் நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் அடாப்டிவ் ஹெட்லேம்ப்கள், டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், கார்னெரிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. புதிய பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ் மாடல்: மினரல் வைட், பிளாக் சஃபையர், மெடிட்டரேனியன் புளூ மற்றும் புளூஸ்டோன் மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News