ஆட்டோமொபைல்
பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1

2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-02-13 10:04 GMT   |   Update On 2020-02-13 10:04 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு விவரங்களை பி.எம்.டபுள்யூ. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடலின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் உள்ளிட்டவற்றில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடலின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் மேம்பட்ட ஸ்டைலிங் செய்யப்படுகிறது. அந்த வகையில் முன்புறம் மேம்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. இது பி.எம்.டபுள்யூ. பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் என தெரிகிறது.

இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள், புதிய முன்புற பம்ப்பர், புதிய எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் கூர்மையான கோடுகளை கொண்டிருக்கிறது. இவை தவிர காரின் பக்கவாட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.



பின்புறத்தில் புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், பெரிய எக்சாஸ்ட் அவுட்லெட்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறமும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகின்றது.

புதிய மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக 8.8 அன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எக்ஸ்1 மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இதன் பெட்ரோல் மோட்டார் 192 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. டீசல் மோட்டார் 188 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News